வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 மே 2021 (15:25 IST)

இங்கிலாந்து நாட்டில் குடியேற இருக்கும் பாக் வீரர்… அதிரடி முடிவு!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இங்கிலாந்துக்கு குடியேற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் சிறப்பானப் பங்களிப்பை செய்துள்ளது. வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ், சோயிப் அக்தர் ஆகியோர் வரிசையில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகச்சிறு வயதிலேயே (17 வயது) சூதாட்டப் புகாரில் சிக்கி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார் அமீர். பின்னர் நன்னடத்தைக் காரணமாக சீக்கிரமே விடுதலையான அமீர் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாடினார்.

அவர் சிறப்பாக பந்துவீசினாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் அவருக்கும் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் திடீரென அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் இப்போது அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த நாட்டிலேயே குடியேற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் மீண்டும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடவும் வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.