டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் முன்னிலை!
வெளியாகியுள்ள டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
பேட்ஸ்மென்கள் தரவரிசையில் 7ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரிஷப் பந்த். 747 புள்ளிகளுடன் 14 ஆம் இடத்திலிருந்து ரிஷப் பந்த் 7 ஆம் இடத்துக்கு முன்னேறினார்.
7 வது இடத்தில் ரோகித் சர்மா, நியூஸிலாந்தின் ஹென்றி நிகோலஸ் ஆகியோரும் உள்ளனர். இதேபோல வாஷிங்டன் சுந்தர் 494 புள்ளிகளுடன் 39 இடங்கள் முன்னேறி 62 ஆம் இடத்தில் உள்ளார்.
இதேபோல இந்திய கேப்டன் விராட் கோலி சமீபமாக சரியாக ஆடாமல் சொதப்பி வந்தாலும் 814 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தில் உள்ளார்.
பவுலிங் தரவரிசையில் 850 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 ஆம் இடத்திலிருந்து 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.