ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டன் திடீர் மாற்றம்!

sivalingam| Last Updated: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (21:44 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு போட்டிகளிலும் கேப்டனாக கவுர் இருந்து வந்த நிலையில் தற்போது மிதலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டனாகவும், கவுர் டி20 போட்டிக்கான கேப்டனாகவும் மாற்றப்பட்டுள்ளதுமேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணி அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் விளையாட உள்ள நிலையில் இந்தப் போட்டிக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

இதில் ஒருநாள் போட்டி தொடருக்கு மிதலி ராஜ் கேப்டனாகவும் ஹர்மன்பிரீட் கவூர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெமிமா, தீப்தி ஷர்மா, பூனம் ரெளட், ஹேமலதா, ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, மான்சி ஜோஷி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராஜேஷ்வரி, தனியா பாட்டியா, புனியா, சுஷ்மாவெர்மா ஆகியோர் இந்திய அணியில் உள்ளனர்அதேபோல் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கவுர் கேப்டனாகவும் மந்தனா துணை கேப்டனாக உள்ளனர். மேலும் ஜெமின, வெர்மா, தியோ, தீப்தி ஷர்மா, தனியா பாட்டியா, பூனம் யதவ், ராதா யாதவ், வேத கிருஷ்ணமூர்த்தி, அனுஜா பட்டேல், ஷிகா பாண்டே, வாஷ்டிராகர், மான்சி ஜோஷி, அருந்ததி ரெட்டி ஆகியோர் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :