நடிகைகள் மீது மதுபானம் ஊற்றிய பிரபல இயக்குநர் ! வைரலாகும் சர்ச்சை வீடியோ

Ram Gopal Varma
Last Updated: சனி, 20 ஜூலை 2019 (18:45 IST)
தமிழ் - தெலுங்கு - ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் மிகவும் பிரசித்தி பெற்ற இயக்குநர் ராம்கோபால் வர்மா. அவர் அவ்வப்போது எதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கை. இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் இவ்வாரம் வெளியான ராம்  போத்தினேனியின் ஸிஸ்மார்ட் ஷங்கர் என்ற படத்தின் சக்சஸ் பார்ட்டியில்  அவர் பங்கேற்றார்.அதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. இதில் இயக்குநர் ராம்கோபால் வர்மா விருந்துக்கு வந்த நடிகைகள் சார்மி, நாபா, நடேஷ், நித்தி அகர்வால் ஆகியோர் மீதும் அவர்கள் தோழிகள் மீதும் மதுபானப் பாட்ட்லை  நன்கு குலுக்கி அவர்கள் மீது மதுபானம் ஊற்றுகிறார். இந்த வீடியோவை அவரே தனது சுட்டுரை எனப்படும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகிவரும் அதேசமயம், சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :