திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (16:04 IST)

இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தும் இந்திய பவுலர்கள்… இங்கிலாந்து திணறல்!

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வரும்  முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது 578 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி பாலோ ஆன் ஆனாலும் இங்கிலாந்து அணியே தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இதுவரை 8 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர். இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை 176 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து விளையாடி வருகிறது. ஆனால் முதல் இன்னிங்ஸில் இந்தியா சொதப்பியதால் இங்கிலாந்து 417 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.