1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:21 IST)

இன்று ஐபிஎல் இறுதி போட்டி: 5வது முறையாக சாம்பியன் ஆகுமா மும்பை?

இன்று ஐபிஎல் இறுதி போட்டி: 5வது முறையாக சாம்பியன் ஆகுமா மும்பை?
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இன்றைய போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் முடிவை உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே 2013, 2015, 2017 மட்டும் 2019 என நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பெற்றுள்ள மும்பை அணி இந்த முறையும் வெற்றி பெற்று ஐந்தாவது முறை சாம்பியன் பட்டம் பெறுமா என்பதையும், அதேபோல் இதுவரை சாம்பியன் பட்டம் பெறாத டெல்லி அணி இன்ரு சாம்பியன் பட்டம் பெறுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
 
கடந்த இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா சொதப்பிய நிலையில் இன்றைய போட்டியில் அவர் வீறுகொண்டு எழுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதேபோல் டெல்லி அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஃபார்மில் இருப்பதால் சாம்பியன் பட்டம் பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மொத்தத்தில் இன்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது