செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (12:20 IST)

வெடி வெடிக்க தடை; புஷ்வானம், மத்தாப்பு ஓகே! – மும்பை மாநகராட்சி உத்தரவு!

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மும்பை மாநகராட்சி தளர்வுகளுடன் கூடிய தடையை அறிவித்துள்ளது.

இந்தியாவில் தீபாவளி நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் முற்றிலுமாக தடை விதித்தன. அதை தொடர்ந்து தற்போது டெல்லிக்கும் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்தியாவில் காற்று மாசுள்ள நகரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பட்டாசு வெடிக்க தளர்வுகளுடன் கூடிய தடையை விதித்துள்ளது மும்பை மாநகராட்சி. அதன்படி மும்பையில் சத்தத்துடன் வெடிக்கும் அனைத்து பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சத்தமில்லாத புஷ்வானம், மத்தாப்பு போன்ற பட்டாசுகளை இரவு 8 மணி முதல் 10 மணிக்குள் வெடித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.