1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (11:43 IST)

இறந்துபோன சுறாவிற்கு பிரசவம் பார்த்த மீனவர்: வீடியோ இணைப்பு!

ஆஸ்திரேலியாவில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் இறந்துபோன சுறாவிற்கு பிரசவம் பார்த்து 92 குட்டி சுறாக்களை வெளியே எடுத்த சம்பவம் குறித்த வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேத்திவ் என்ர மீனவர் ஒருவர் கடலுக்கு சென்ற போது, கடலில் உள்ள மற்ற சுறாக்களால் தாக்கப்பட்ட கர்ப்பிணி சுறா ஒன்று இறந்து போன நிலையில் இவரது படகில் மோதியுள்ளது. 
 
சுறா இறந்துவிட்டதாக கருதியவர், அதன் வயிற்று பகுதியில் துடிப்பு இருப்பதை கண்டுள்ளார். இதனால் சுறாவை படகில் வைத்து, அதன் வயிற்றை கிழித்து 92 குட்டி சுறாக்களை கடலில் விட்டுள்ளார்.
 
இந்த வீடியோ தற்போது வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேத்திவ் பின்வருமாரு கூறினார், எனக்கு கடல்வாழ் உயிரினங்களை பிடிக்கும். இதற்கு முன்னர் இது போன்று செய்ததில்லை. சுறாவில் வயிற்றில் குட்டிகள் இருந்ததால் இவ்வாறு செய்து அதனை கடலில் விட்டேன். குட்டிகள் அனைத்தும் ஆரோக்கியமான இருந்தன என கூறியுள்ளார்.