ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மேரிகோம்: குவியும் வாழ்த்துக்கள்

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மேரிகோம்
Last Modified செவ்வாய், 10 மார்ச் 2020 (13:41 IST)
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மேரிகோம்
இந்தியாவின் பெருமைக்குரிய விளையாட்டு வீராங்கனையான மேரிகோம் ஏற்கனவே 6 முறை உலக சாம்பியன் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பாக்சிங் காலிறுதிக்கு தகுதி போட்டியில் இந்தியாவின் மேரிகோம் மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார் இதனை அடுத்து அவர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது மட்டுமின்றி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனையை மேரிகோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். அவரது வெற்றிக்கு இந்திய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து அவர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மேரிகோம் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று அதில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :