1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 மார்ச் 2018 (17:44 IST)

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை மனு பாகெர்

மெக்சிக்கோவில் நடைப்பெற்று வந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாகெர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
 
மெக்சிக்கோவில் உள்ள குடலாஜாராவில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று முந்தினம் இரவு நடந்தது. இதில் 16-வயதான இந்திய வீராங்கனை மனு பாகெர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் 237.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார்.
 
இந்த போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான மெக்சிகோவின் அலெஜான்ட்ரா ஜாவாலா 237.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், பிரான்ஸ் வீராங்கனை செலின் கோபெர்விலே 217 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். மேலும் மற்றொரு இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி சிங் தேஸ்வால் 196.1 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பெற்றார்.