1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2018 (16:13 IST)

ஜெ.வின் உருவ சிலை சர்ச்சை - வடிவமைப்பாளர் ஆதங்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலையை, தனது சொந்த செலவிலேயே சரி செய்து தருவதாக அதை வடிவமைத்த சிற்பி பி.எஸ்.வி.பிரசாத் கூறியுள்ளார்.

 
ஜெ.வின் 70வது பிறந்த நாளையொட்டி கடந்த 24ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ.வின் 70 அடி உயர வெண்கல சிலையை அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அந்த சிலையின் எந்த பக்கத்திலும் ஜெ.வின் சாயல் இல்லை. 
 
எனவே, இந்த விவகாரம் சமூக வலைத்தளங்கலில் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளானது. அந்த சிலையை நடிகை காந்திமதி, சசிகலா, வளர்மதி மற்றும் முதல்வரின் மனைவி உள்ளிட்ட பலரோடு ஒப்பிட்டு பல மீம்ஸ்கள் உலா வந்தன. இதனால் கோபமடைந்த அமைச்சர் ஜெயக்குமார், மனசாட்சி இல்லாத மிருகங்கள்தான் ஜெ.வின் சிலையை விமர்சிப்பார்கள் என கோபமாக கருத்து தெரிவித்தார். ஆனால், இன்னும் 15 நாட்களில் ஜெ.வின் சிலையில் மாற்றம் கொண்டுவரப்படும் என தற்போது பல்டி அடித்துள்ளார். 
 
இந்நிலையில் ஜெ.வின் சிலையை உருவாக்கிய விஜயவாடாவை சேர்ந்த சிற்பி பி.எஸ்.வி.பிரசாத் இதுபற்றி கூறியதாவது:
 
ஜெ.வின் சிலையை உருவாக்க வேண்டும் என 20 நாட்களுக்கு முன்புதான்  எங்களிடம் கூறினார்கள். எனவே, குறுகிய காலத்தில் நான், எனது சகோதரன் மற்றும் 20 ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து உருவாக்கினோம். குறுகிய காலத்தில் செய்யப்பட்ட சிலை என்பதால் அதில் சில தவறுகள் நடந்திருக்கலாம். அந்த சொந்த செலவில் சரி செய்து கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த சிலை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை எங்களுக்கு வேதனையை தருகிறது. இதற்கு முன் பல தலைவர்களுக்கு சிலை வடிவமைத்து கொடுத்துள்ளோம். ஆனால், இதுபோல் சர்ச்சை ஏற்பட்டதில்லை” என அவர் வருத்தத்துடன் கூறினார்.