திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 மே 2022 (16:49 IST)

கே.எல்.ராகுல், தீபக் ஹூடா அரைசதம்: லக்னோ அபார ஆட்டம்!

lsg vs dc
கே.எல்.ராகுல், தீபக் ஹூடா அரைசதம்: லக்னோ அபார ஆட்டம்!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நாற்பத்தி ஐந்தாவது போட்டி இன்று லக்னோ மற்றும் டில்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டீகாக் 23 ரன்களில் அவுட்டான போதிலும் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். இருவரும் அரைசதம் அடித்து உள்ள நிலையில் சற்று முன் அந்த அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 புள்ளி பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி இன்றைய போட்டியில் வென்றால் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் நான்காவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது