திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2019 (09:30 IST)

அண்ணா சொன்னதைதான் ரஜினி சொல்லியுள்ளார் - அமைச்சர் செல்லூர் ராஜூ

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயலைப் பாராட்டிய நடிகர் ரஜினியின் கருத்து அண்ணாவின் கருத்தை ஒத்திருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வந்துள்ளன. இது குறித்துப் பேசிய ரஜினி காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு ராஜதந்திரத்தோடு கையாண்டுள்ளது எனவும் மோடியும் அமித்ஷாவும் அர்ஜுனனும் கிருஷ்ணரும் போன்றவர்கள் எனவும் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார்.

இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று இதுகுறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு ‘1960 களில் இந்தியா மீது சீனா படையெடுத்தபோது, ‘வீடு இருந்தால் நாம் கூரை மாற்றிக்கொள்ளலாம். எனவே முதலில் இந்தியா எனப்படும் வீட்டை காப்பாற்ற வேண்டும்’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அதே கருத்தைத்தான் நடிகர் ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் கூறியிருக்கிறார். அவரது கருத்து வரவேற்கத்தக்கது’ எனக் கூறியுள்ளார்.