1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (11:16 IST)

வாங்காத பட்டமில்ல.. பதக்கமில்ல.. படைக்காத சாதனையில்ல! – சாதனை நாயகன் மெஸ்சி.

கால்பந்தாட்டத்தில் ஹீரோவாக வலம் வரும் அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்சியின் 34வது பிறந்தநாளை இன்று ரசிகர்கள் ஆராவரமாக கொண்டாடி வருகின்றனர்.

கால்பந்தாட்டத்தில் உலக போட்டிகளில் அர்ஜெண்டினா பெயரை சொன்னாலும், லா லிகாவில் பார்சிலோனா பெயரை சொன்னாலும் ரசிகர்கள் வாயிலிருந்து வரும் முதல் பெயர் லியோனல் மெஸ்சி. 10ம் நம்பர் ஜெர்ஸியுடன் மைதானத்திற்குள் கால் வைக்கும் மெஸ்சி தற்போதைய கால்பந்து ரசிகர்களின் டியாகோ மரடோனா. க்ளப் ஆட்டங்களில் அதிகமான கோல்களை அடித்து தனது குருவான மரடோனாவின் சாதனையையே முறியடித்தவர் லியோனல் மெஸ்ஸி.

6 முறை பாலோன் டியோர் விருது, 2019ம் ஆண்டின் சிறந்த ஃபிஃபா ப்ளேயர், கோப்பா டெல் ரே, லா லிகா, யூஇஎப்ஏ போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து 21 முறை முதலிடம், 4 முறை சாம்பியன்ஸ் லீக் வின்னர் என மெஸ்சி பெற்ற விருதுகளும், சாதனைகளும் ஏராளமானவை. GOAT என செல்லமாக அழைக்கப்படும் மெஸ்ஸியின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.