திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (10:59 IST)

உறுதியாக இரு எரிக்சன்; டீ சர்ட்டை கழற்றி காட்டிய லாய்னர்! – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

நேற்றைய ஈரோ கால்பந்து போட்டியில் முதல் கோலை பதிவு செய்த லாய்னர், எரிக்சனுக்காக டீ சர்ட்டை கழற்றி காட்டியது வைரலாகியுள்ளது.

ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்றைய மேட்ச் டேவில் ஆஸ்திரியா – வடக்கு மாசிடோனியா அணிகள் மோதிக் கொண்டன.

இதில் முதல் சுற்று முடிவதற்க்குள்ளாக ஆஸ்திரிய வீரர் ஸ்டெபன் லாய்னர் முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து மாசிடோனியா வீரர் பாண்டேவ் மற்றொரு கோலை பதிவு செய்ய, முதல் 45 நிமிடங்களில் 1-1 என்ற கணக்கில் கோல் ரேட் இருந்த நிலையில், இரண்டாவது சுற்றில் ஆஸ்திரியாவின் க்ரிகோரிச் மற்றும் மார்கோ அர்னடோவிச் தலா ஒரு கோல்களை பதிவு செய்து 3-1 என்ற கணக்கில் மாசிடோனியாவை தோற்கடித்தனர்.

இந்த போட்டியில் முதல் கோலை பதிவு செய்த ஸ்டெபன் லாய்னர் உடனடியாக தனது டீ சர்ட்ட்சை கழற்றி அதில் எழுதியிருந்த “உறுதியாக இரு எரிக்சன்” என்ற வாசகத்தை ரசிகர்களிடையே காட்டினார். டென்மார்க் வீரர் எரிக்சன் முந்தைய நாள் போட்டியின் போது மயங்கி விழுந்து நினைவிழந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.