செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 மார்ச் 2021 (09:08 IST)

தொடரை வெல்லப்போவது யார்? இன்று 5 ஆவது டி 20 போட்டி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி 20 போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்க உள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த போட்டிகளில் இரு அணிகளும் 2 வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று ஐந்தாவது போட்டி அகமதாபாத் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடக்க உள்ளது.

தொடரை வெல்லப்போகும் டிசைடர் போட்டி என்பதால் இரு அணிகளும் முனைப்போடு விளையாடுமெ என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.