கொரோனா பரவல் எதிரொலி: பள்ளிகள் மீண்டும் மூடப்படுகிறதா?
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுகிறதா என்பது குறித்து அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் பதிலளித்துள்ளார்
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் மக்கள் பீதி அடைந்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பேட்டியளித்த மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் கூறியபோது பள்ளிகளில் மாணவர்களை விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றி வந்த கொண்டிருக்கிறார்கள். எனவே பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை/ மாணவர்கள் மாநிலத்திற்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார்கள் எனவே வழக்கம் போல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்