செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (13:54 IST)

இந்தியா கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் – கோலியைப் புகழ்ந்த பிரையன் லாரா !

வெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் பிரையன் லாரா இந்தியா கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறியுள்ளார்.

மும்பையில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக லெஜண்ட்ஸ் டி 20 தொடர் நடக்க உள்ளது. இதில் ஓய்வுபெற்ற முன்னணி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ‘ இந்திய வேகப்பந்து வீச்சுக் கூட்டணி சிறப்பாக உள்ளது. நான் பூம்ராவின் பந்துவீச்சைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அவரது பவுலிங் 1990 களின் பவுலர்களை நியாபகப்படுத்துகிறது. ரோஹித் சர்மா ஒரு அபாரமான வீரர். அவர் லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும்போது டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும். விராட் கோலி இப்போது சிறந்த கேப்டனாக விளங்குகிறார். தனது ஆட்டத்தின் மூலம் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். ஆட்டத்தின் அனைத்துத் தளங்களிலும் அவர் சிறப்பாக செயல்படுகிறார். தோனி அமைத்துக்கொடுத்த பாதையில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். 1970, 80களில் மே.இ.தீவுகளும், 1990களில் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தியது தற்போது இந்தியா கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.