தொடர்புடைய செய்திகள்
- மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?
- ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?
- CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?
- “தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!
- கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!
கொல்கத்தா- ராஜஸ்தான் போட்டி ரத்து.. ஆடாமல் ஜெயிச்ச ஐதராபாத்..!
நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
நேற்று கவுஹாத்தியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக தாமதமானது. அதன் பின்னர் இரவு 10 மணிக்கு மேல் 5 ஓவர் போட்டி நடத்த திட்டமிட்ட நிலையில் திடீரென மீண்டும் மழை பெய்ததால் வேறு வழி இன்றி போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு காரணமாக கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் 17 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ஹைதராபாத் அணியை விட ரன் ரேட் குறைவாக இருந்ததால் அந்த அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதனை அடுத்து ஹைதராபாத் அணி ஆடாமலேயே இரண்டாவது இடத்தை பெற்றது என்பது முதல் குவாலிபயர் 1 போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே தான் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
