செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (08:58 IST)

’தோனி தோனி’ என்று கத்தாதீர்கள் – ரசிகர்களுக்கு கோஹ்லி வேண்டுகோள் !

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்ட் ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில் தோனி தோனி எனக் கத்தி அவரைக் கிண்டல் செய்யவேண்டாம் என ரசிகர்களுக்கு கோஹ்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தோனியின் ஓய்வுகாலம் நெருங்கிவரும் வேளையில் அவருக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மோசமான பேட்டிங் மற்றும் கட்டுக்கோப்பில்லாத விக்கெட் கீப்பிங் ஆகியவற்றால் அதிகமாக விமர்சனம் செய்யப்படுகிறார். அதிகமாகா கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்களை கோட்டை விடுகிறார். அப்போது ரசிகர்கள் தோனி தோனி எனக் கத்தி அவரை கிண்டல் செய்கின்றனர். இது அவருக்கு மேலும் அசௌகர்யமான சூழலை உருவாக்குகிறது. இந்நிலையில் பண்ட்டுக்கு ஆதரவாக இந்திய அணியின் கேடன் கோஹ்லி பேசியுள்ளார்.

நேற்று நடந்த பத்த்ரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர் ‘ரிஷப் பந்த் அவரது திறமையை நிரூபிப்பதற்கு தேவையான வாய்ப்புகளை வழங்குவது அனைவரது பொறுப்பு. அவர் தனக்கு மைதானத்தில் ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில் ’தோனி தோனி’ எனக் கத்தாதீர்கள். இது மரியாதையாக இல்லை. நாட்டுக்காக விளையாடும்போது நிச்சயம் ரசிகர்களின் ஆதரவு தேவை’ எனக் கூறியுள்ளார்.