வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (17:00 IST)

ஒன் மேன் ஆர்மி கோஹ்லி … இந்தியா 250 ரன்கள் சேர்ப்பு – கட்டுப்படுத்துமா பவுலிங் படை !

இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்களை சேர்த்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இரண்டாவது போட்டி இன்று  நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் சற்று முன்னர் தொடங்கியது. இதில் டாஸில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்க் இறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே சீராக விக்கெட்களை இழந்து வந்தது. இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். விஜய் சங்கர், ரவிந்தர ஜடேஜா ஆகியோர் அவருக்கு துணையாக சிறிது நேரம் நின்று விளையாடினார்.

சிறப்பாக விளையாடிய கோஹ்லி தனது 40 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய  அவர் 120 பந்துகளில் 116 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்களை மட்டுமே எடுத்தது.

சிறப்பாக பந்து வீசிய ஆஸியின் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்களையும் ஆடம் ஸாம்பா 2 விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தி அசத்தினர்.