செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (13:49 IST)

டாஸ் வென்ற ஆஸி பவுலிங் – இந்தியா அதிர்ச்சித் தொடக்கம் !

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி இந்தியாவைப் பேட் செய்ய பணித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இரண்டாவது போட்டி இன்று  நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் சற்று முன்னர் தொடங்கியது. இதில் டாஸில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக எண்ணிய நிலையில் இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது.

இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். விராட் கோஹ்லியும் தவானும் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 4 ஓவர்களில் 16 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.