திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (13:35 IST)

கேதார் ஜாதவ் காயம் – உலகக்கோப்பை அணியில் ராயுடுவா ? பண்ட்டா ?

சென்னை அணியின் வீரர்களில் ஒருவரான கேதார் ஜாதவ் நேற்றையப் போட்டியில் காயமடைந்துள்ளதால் அவர் இனி எஞ்சியிருக்கும் போட்டிகளில் விளையாடமாட்டார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் அணியுடனானப் போட்டியின் பீல்டிங்கின் போது சென்னை அணியின் வீரர் கேதார் ஜாதவ் பந்தைப் பிடிக்க முயன்ற போது கீழே விழுந்து தோள்பட்டையில் அடிபட்டது. அதனால் அவர் களத்தில் இருந்து வெளியேறினார்.

சென்னை அணி குவாலிஃபயருக்கு முன்னேறியுள்ள நிலையில் அணி நிர்வாகம் சார்பாக கேதார் ஜாதவ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களில் உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்க உள்ளன. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கேதார் ஜாதவ்வும் இடம் பெற்றிருக்கிறார்.

அவருக்கு இன்னும் சில நாட்களில் எக்ஸ் ரே போன்ற பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின்னர் அவர் உடல்தகுதி சரிவராத பட்சத்தில் அவர் உலகக்கோப்பைத் தொடரில் இருந்தும் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. அப்படி அவர் நீக்கப்படும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக ராயுடு அல்லது பண்ட் உலகக்கோப்பை அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.