ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 நவம்பர் 2020 (19:16 IST)

Definitely Not: தோனிக்கு நன்றி தெரிவித்த ரஜினி பட இயக்குனர்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டி துவங்கும் முன் வர்ணனையாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தோனியின் பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் கடைசி போட்டியா இது என்று வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு Definitely Not என்ற தோனியின் பதில் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதுகுறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ’தோனி அவர்களுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் நடிகர் சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தரமான வார்த்தைகள்’ என்று குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் பல திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் தோனியின் இந்த இரண்டு வார்த்தைகள் குறித்து தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது