தோனியின் எதிர்காலம் சந்தேகம்தான் – மற்றொரு முன்னாள் கேப்டன் கருத்து!

தோனி
Last Modified செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (08:50 IST)
தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இனி இந்திய அணிக்காக விளையாடுவது சந்தேகம்தான் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் தோனி இந்திய அணியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் அவரின் எதிர்காலம் குறித்து பல்வேறு முன்னாள் இன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ‘நீண்ட நாட்களாக தோனி அணியில் விளையாடாமல் இருக்கிறார். அப்படி இருக்கையில் அவர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் தோனி ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :