தோனி ஓய்வு பெற்றால் இந்தியாவுக்கு பெரிய இழப்பு: கபில்தேவ்

Last Modified ஞாயிறு, 26 ஜனவரி 2020 (15:11 IST)
தோனி எப்போது ஓய்வு பெற்றாலும் அது இந்தியாவுக்கு பெரிய இழப்பு என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் கடந்த 1983ஆம் ஆண்டு இந்தியாவுக்கு
உலகக்கோப்பையை பெற்று தந்தவருமான கபில்தேவ் கூறியுள்ளார்.
கடந்த 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி நிகழ்வை மையமாக வைத்து பாலிவுட்டில் ‘83’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள இந்த படத்தில் தமிழ் நடிகர் ஜீவா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் தமிழ் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கபில்தேவ் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக தோனி நாட்டிற்காக சிறப்பான விளையாட்டை கொடுத்துள்ளார். அவர் நிச்சயம் ஓய்வு பெறுவார். அது விரைவிலோ அல்லது தாமதமாகவோ நடக்கும். அவர் எப்போது ஓய்வை அறிவிப்பார் என எனக்கு தெரியாது. ஆனால் தோனி எப்போது ஓய்வுப் பெற்றாலும் அது இந்தியாவுக்கு பெரிய இழப்பு’ என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :