1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2020 (18:37 IST)

இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் ஆலோசகராக முன்னாள் ஜாம்பவான் வீரர்!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் ஆலோசகராக ஜாக் காலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் சமீபத்திய ஆண்டுகளில் சச்சினுக்கு நிகரான ஒரு டெஸ்ட் வீரர் என்றால் அது ஜாக் காலிஸ்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதையடுத்து இப்போது அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளார். இலங்கைக்கு ஜனவரி மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அந்த தொடரில் இருந்து காலீஸ் பொறுப்பேற்க உள்ளார்.