புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2020 (07:15 IST)

அன்னிய மண்ணில் முதல் பகலிரவு டெஸ்ட்: சாதிக்குமா இந்தியா?

இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே ஒரு சில பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தபோதிலும் அன்னிய மண்ணில் இன்று தான் முதல் முதலாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது
 
இன்று அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தொடங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியின் இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தயாராக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் முந்தைய முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை
 
ஆஸ்திரேலியாவில் இதுவரை 12 டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்று உள்ளது. ஆனால் 2018-19 ஆம் ஆண்டுதான் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பதும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியில் விளையாடிய 46 டெஸ்ட் போட்டிகளில் 7ல் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2ல் மட்டும் தான் வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய இந்திய அணி நல்ல ஃபார்மில் இருப்பதால் கண்டிப்பாக இந்த தொடரில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் இணைந்துள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வார்னர் உள்ளிட்ட ஒருசில அனுபவ வீரர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.