1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2020 (09:28 IST)

முதலாவது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

முதலாவது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த நிலையில் இன்று டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது
 
இதனை அடுத்து சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இந்திய அணி சிலநிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் குறித்த தகவல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன: அவை பின்வருமாறு:
 
இந்திய அணி: மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, விராத் கோஹ்லி, ரஹானே, விஹாரி, சஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், ஷமி, பும்ரா
 
ஆஸ்திரேலியா அணி: பர்ன்ஸ், வேட், லாபுசாஞ்சே, ஸ்மித், ஹெட், க்ரீன், டிம் பைன், கம்மின்ஸ், ஸ்டார்க், லியோன், ஹாசில்வுட்,
 
இந்திய அணி அன்னிய மண்ணில் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி வென்று புதிய சாதனை படைக்க வேண்டும் என்பதும் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது