புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 2 டிசம்பர் 2021 (11:28 IST)

கே எல் ராகுல் மீது பிசிசிஐ விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்! பஞ்சாப் அணி நிர்வாகம் அதிருப்தி!

பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே எல் ராகுல் ஏலத்தில் பங்கெடுக்கப் போவதாக அறிவித்ததை அடுத்து அவரை பஞ்சாப் அணி தக்கவைக்கவில்லை.

ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த தொடக்க ஆட்டக்காரராக செயல்பட்டு வருகிறார் கே எல் ராகுல். இப்போது பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் அவரை புதிதாக தொடங்கப்பட்டுள்ள லக்னோ அணிக்காக ஏலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு 20 கோடி ரூபாய் வரை ஏலத்தொகை கொடுக்க லக்னோ அணி தயாராக உள்ளதாம். லக்னோ அணிக்கு கேப்டனாகவும் கே எல் ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பஞ்சாப் அணி அவரை தக்கவைக்க விரும்பியதாகவும், ஆனால் அவர்தான் ஏலத்தில் பங்கேற்க போவதாக சொல்லி விலகிக் கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள பஞ்சாப் அணி நிர்வாகியான நெஸ் வாடியா ‘பஞ்சாப் அணியில் இருக்கும்போதே அவர் வேறு ஒரு அணியிடம் பேரம் பேசியிருந்தால் அது தவறாகும். அப்படி நடந்திருந்தால் பிசிசிஐ விதிகளின் படி அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.