ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 மே 2022 (12:00 IST)

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச்சுடன் மோதும் நடால்! – தீவிர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Djokovic Nadal
பிரெஞ்சி ஓபன் டென்னிஸ் கால் இறுதி போட்டியில் மிக பிரபலமான வீரர்களான ஜோகோவிச்சும், நடாலும் மோதவுள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் உள்ள பாரிஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு நாட்டு வீரர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் பிரபல செர்பிய நாட்டு வீரர் நோவக் ஜோகோவிச் அர்ஜெண்டினாவின் டியாகா ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அதேபோல மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் கனடா வீரர் பெலிக்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். தற்போது காலிறுதியில் உலக பிரபல டென்னிஸ் வீரர்களான ஜோகோவிச்சும், நடாலும் மோத உள்ளனர்.

இந்த முறையையும் சேர்த்து இதுவரை இவர்கள் இருவரும் ப்ரெஞ்சு ஓபன் டென்னிஸில் 10வது முறையாக மோதுகிறார்கள். பிரெஞ்சு ஓபன் தொடரை 13 முறை வென்ற நடால், ஜோகோவிச்சை வீழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.