1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 2 ஜூன் 2025 (08:15 IST)

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற குவாலிபையர் 2 போட்டியில், பஞ்சாப் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.  போட்டி நடைபெற்ற அகமதாபாத்தில் மழை பெய்ததால் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா குறைந்த ரன்களில் அவுட் ஆனாலும், ஸ்டொய்னிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் ஆகியோர் அதிரடியாக விளையாடியதால், அந்த அணியின் ஸ்கோர் 203 என உயர்ந்தது.

அதையடுத்து ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியாக விளையாடினாலும் அவ்வப்போது விக்கெட்களை இழந்தவண்ணம் இருந்தது. ஆனால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்ட உதவினார். அவர் 41 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கேப்டனாக மூன்று அணிகளை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஸ்ரேயாஸ். 2020 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும், 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியையும் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியையும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.