1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (11:05 IST)

நான்காவது டெஸ்ட்டில் அஸ்வின் வருகை… ஜோ ரூட் சொன்ன பதில்!

நான்காவது டெஸ்டில் இந்திய அணியில் கண்டிப்பாக சில மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பெற்று தொடர் சமனில் உள்ளது. இதனால் நாளை தொடங்கும் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய அணியில் நாளைக் கண்டிப்பாக அஸ்வின் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஜோ ரூட் ‘அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர். எங்களுக்கு எதிராக அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது திறமை என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அவரை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம்.  பந்தை மட்டுமே நாங்கள் பார்ப்போமே தவிர அவர்களின் வரலாறுகளை அல்ல.’ எனக் கூறியுள்ளார்.