1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 15 ஜூலை 2020 (19:36 IST)

நாளை இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்

இங்கிலாந்து அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் பெற்ற தோல்வி இங்கிலாந்து அணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் நாளை இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. மான்செஸ்டர் நகரில் நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் இருந்து ஜோ டென்லி நீக்கப்பட்டுள்ளார். முன்னணி பேட்ஸ்மேனான ஜோ டென்லி அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக ஜோ ரூட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
 
மே.இ.தீவுகள் அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. நாளை தொடங்கவிருக்கும் போட்டியிலும் வென்று மே.இ.தீவுகள் அணி தொடரை கைப்பற்றுமா? அல்லது இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்