வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 25 அக்டோபர் 2021 (08:24 IST)

மாற்றி இறக்கப்பட்ட ஜடேஜா, ஹர்திக்: ஃபார்ம் இல்லாத புவனேஷ்குமார்!

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த ரிஷப் பண்ட் அவுட் ஆனதும் ஹர்திக் பாண்டியா தான் முறைப்படி களமிறங்கி இருக்க வேண்டும்
 
ஆனால் இடதுகை ஆட்டக்காரர் அவுட் ஆனதால் ஜடேஜா களமிறங்கினார். ஜடேஜாவுக்கு அதிரடியாக அடிக்க நன்றாக வரும் என்பதால் அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தான் களமிறங்கி இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் 
முன்கூட்டியே ஜடேஜா எடுக்கப்பட்டதால் அவர் பந்துகளை தடவிக்கொண்டே ஆடினார் என்றும் அவரது வழக்கமான ஆட்டம் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது அதேபோல் நேற்றைய பந்துவீச்சின் போது புவனேஷ்குமார் படுமோசமாக பந்துவீசியதையும் நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
அதேபோல் கடைசி கடைசி வரை சொதப்பலாக போட்ட ஷமியும் தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் நேற்று பேட்டிங் பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் மோசமாக செயல்பட்டதால் தான் இந்திய அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது