வாய்ப்பு கிடைத்தும் கோட்டை விட்ட இஷாந்த் சர்மா!

Last Updated: திங்கள், 4 ஜூன் 2018 (17:58 IST)
ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான அங்கீகாரத்தை ஐசிசி வழங்கியுள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடுகிறது. 
 
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் வீரர்களுக்கான பட்டியலில் இஷாந்த் சர்மா இடம்பெற்றிருந்தார். 
 
இஷாந்த் சர்மா ஐபிஎல் போட்டியில் ஏலத்தில் எடுக்கப்படாத காரணத்தால், இங்கிலாந்தில் நடைப்பெறும் கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அப்போது அவரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. 
 
இருப்பினும் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில், மீண்டும் காயம் ஏற்பட்டு போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்கனுக்கு எதிரான டெஸ்ட் போட்டி இன்னும் 10 நாட்களில் துவங்கவுள்ள நிலையில், இஷாந்த் சர்மா இந்திய அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :