திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 ஜூன் 2018 (06:21 IST)

27 ரன்களில் மலேசியாவை சுருட்டிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

20  ஓவர்கள் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடர் ஜூன் 1ஆம் தேதி முதல் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி, மலேசிய மகளிர் அணியுடன் மோதியது.
 
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கவுர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை மிதிலிராஜ் அதிரடியாக விளையாடி 97 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். இந்த நிலையில் இந்திய அணி 20 ஓவரகளில் 3 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் எடுத்தது.
 
170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மலேசிய அணி இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 27 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியின் 6 வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். மேலும் ஒருவர் கூட இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் அதிக ரன்ரேட் காரணமாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.