இந்தியாவில் ஆப்கானிஸ்தான் - வங்கசேத அணிகள் மோதல்

Afghan Vs Ban
Last Updated: ஞாயிறு, 3 ஜூன் 2018 (15:30 IST)
ஆப்கானிஸ்தான் - வங்கதேச அணிகள் இடையே டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

 
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் அடுத்த நிலைக்கு செல்ல ஐசிசி இந்தியாவில் விளையாட அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் விளையாட வரும் அணிகள் ஆப்கானிஸ்தான் அணியுடனும் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தான் - வங்கதேச அணிகள் இடையேயான டி20 தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்குகிறது. ஜூன் 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகள் போட்டிகள் நடைபெறுகிறது.
 
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏற்றவாறு ஆப்கானிஸ்தான் நாட்டில் மைதானங்கள் அமையாததால், வங்கதேசத்திற்கு எதிரான தொடர் இந்தியாவின் டேராடூன் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :