திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 அக்டோபர் 2021 (11:03 IST)

ஹர்திக் பாண்ட்யாவுக்குப் பதில் இஷான் கிஷான்… முன்னாள் வீரரின் ஆலோசனை!

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா கடந்த சில மாதங்களாக மோசமான பார்மில் இருக்கிறார்.

ஐபிஎல் தொடரிலும் ஜொலிக்காத அவர் உலகக்கோப்பை போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. காயம் காரணமாக அவர் பந்துவீச்சிலும் ஈடுபடுவதில்லை. இதனால் அவரின் இடம் அணியில் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் நியுசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதில் இஷான் கிஷானைக் களமிறக்கலாம் என கூறியுள்ளார். அதேபோல புவனேஷ்வர் குமாருக்கு பதிலாகவும் ஷர்துல் தாக்கூரை இறக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.