1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 50 lakh plus dead due to corona

50 லட்சத்தை கடந்த மரண எண்ணிக்கை... உலகை உலுக்கும் கொரோனா

உலகம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24.66 கோடியைக் கடந்துள்ளது.

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24.66 கோடியைக் கடந்துள்ளது.
 
ஆம், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.66 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22.34 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 
கொரோனா வைரஸ் பரவியவர்களில் 1.82 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 74 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட முன்னணி பரப்புரையாளர் மரணம்