1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 1 நவம்பர் 2017 (19:26 IST)

நான் தேவையில்லை என கூறியிருந்தால் முன்பே விலகி இருப்பேன்; ஏன் இப்படி? இர்பான் பதான் வருத்தம்

பரோடா அணியின் கேப்டன் பதவியிலிருந்தும், அணியிலிருந்தும் நீக்கப்பட்டது குறித்து இர்பான் பதான் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.


 

 
முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் தற்போது உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பரோடா அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும், அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இர்பான் பதான் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
பரோடா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது பெருமையாக கருதினேன். கடந்த 2 மாதங்களாக நான் வீரர்களுடன் கடுமையாக உழைத்தேன். வீரர்களும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். இந்த உள்நாட்டு கிரிக்கெட் தொடர் தொடங்கும் முன்பே என் சேவை தேவையில்லை என கூறி இருந்தால் நான் அடுத்தவருக்கு வழிவிட்டிருப்பேன். எனக்கு பரோடா அணிக்கு ஆடுவது பிடிக்கும், பெருமையானது என்று கூறியுள்ளார்.