ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு சலுகை!
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு சலுகை!
ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் சிறப்பு சலுகை அளித்துள்ளது
13வது ஐபிஎல் போட்டி நாளை முதல் நடைபெறுகிறது என்பதும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை ஒருநாள் போட்டி தொடரில் விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி விரர்கள் நேற்று ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அமீரகம் வந்துள்ளனர்
மற்ற நாடுகளின் வீரர்கள் அனைவரும் கடந்த மாதமே ஐக்கிய அமீரகம் வந்து விட்ட நிலையில் இரு நாட்டு வீரர்கள் மட்டும் நேற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற விதி உள்ள நிலையில் போட்டி தொடங்க இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளதால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களை மட்டும் 36 மணிநேரம் தனிமைப் படுத்தினால் போதும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது