வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 20 மே 2018 (16:04 IST)

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு

இன்றைய ஐபில் ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோதவுள்ள டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
 
ஐபிஎல் போட்டியின் இன்றைய 4.00 மணி ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும், ஷிரியாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன. டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.
 
டெல்லி அணி இதுவரை விளையாடிய 13 ஆட்டத்தில்4 இல் வெற்றி பெற்று 9 இல் தோற்றுள்ளது. இதன்மூலம் டெல்லி அணி ப்ளே - ஆப் சுற்றிற்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. அடுத்ததாக மும்பை அணி இதுவரை விளையாடிய 13 ஆட்டத்தில் 6 இல் வெற்றி பெற்று 7ல் தோற்றுள்ளது. 
 
இந்நிலையில் இன்றைய டெல்லி - மும்பை அணிக்கான மோதலுக்காக  சற்று நேரத்திற்கு முன்பு டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளது. மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றினுள் நுழைய வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த மேட்சை விளையாட உள்ளது.