ஐதராபாத்தை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா

Last Modified ஞாயிறு, 20 மே 2018 (05:35 IST)
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

நேற்றைய 54வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டியின் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்தது.

173 ரன்கள் எடுத்தால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் லின் 55 ரன்களும், உத்தப்பா 45 ரன்களும், நரேன் 29 ரன்களும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருதை லின் தட்டி சென்றார்
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் மும்பை, பஞ்சாப், மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளில் ஒரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :