ஐபிஎல் 2019 இந்தியாவில்தான் ! –அறிவித்தது பிசிசிஐ …

Last Modified புதன், 9 ஜனவரி 2019 (06:54 IST)
ஆம் ஆண்டுக்கான 12 வது ஆண்டுத் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் என இந்தியக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருப்பதால் பாதுகாப்புக் காரணங்களால் இந்தியாவில் நடத்துவதில் பிரச்சனைகள் ஏற்பட்டன. அதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்கா அல்லது துபாயில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இதுபோல 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகள் பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆனால் இப்போது திடீர் திருப்பமாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தப்படும் என அறிவித்துள்ளது. மார்ச் 23ல் ஆரம்பிப்பதால் மே மாதம் வரை செல்லும், உடனேயே உலகக்கோப்பை இருப்பதால், ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் அயல்நாட்டு வீரர்கள் ஆடமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :