வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (17:24 IST)

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்த தகவல் வெளியாகி உள்ளது
 
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது
 
இந்த போட்டியில் ஜப்பான் வீராங்கனையும் இந்திய வீராங்கனை பிவி சிந்துவும் மோதினர். இதில் 13 - 21 9 - 21 என்ற நேர் செட் கணக்கில் பிவி சிந்து தோல்வியடைந்தது தொடரில் இருந்து வெளியேறினார்
 
இந்த நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரருடன் இன்று மோத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது