வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 நவம்பர் 2021 (18:55 IST)

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி: நமீபியா போராடி தோல்வி

இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் நமீபியா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது 
இன்றைய போட்டியில் நமீபியா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்ததால் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது 
 
இதனையடுத்து 164 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வெற்றியின் காரணமாக நியூசிலாந்து அணி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது