1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 நவம்பர் 2021 (19:01 IST)

உகாண்டா சென்ற இந்திய பேட்மிண்டன் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டுவெடிப்பு!

உகாண்டா நாட்டு தலைநகர் கம்பாலாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொள்ள உகாண்டா சென்றிருந்த தமிழ்நாட்டு வீரர்கள் அடங்கிய இந்திய அணி தங்கியிருந்த ஹோட்டல் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
இரு சக்கரவாகனத்தில் வந்த தற்கொலைபடையினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பில் இந்திய அணிக்கு பாதிப்பு இல்லை என்றும், வீரர்கள் பத்திரமாக இருப்பதாக பயிற்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.