வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (17:22 IST)

மகளிர் உலகக்கோப்பை தொடர்: மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

மகளிர் உலகக்கோப்பை தொடர்: மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
இந்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நியூசிலாந்து நாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகளின் பெயர்கள் பின்வருமாறு: மிதாலிராஜ், ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வெர்மா, யாஸ்டிகா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா, மேக்னா சிங், ராஜேஸ்வரி, பூனம் யாதவ், ஹர்மன்ப்ரீத் சிங், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஸ்னே ரானா, ரேணுகா சிங் தாக்கூர், தன்யா பாட்டியா, 
 
 இந்த போட்டி மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் இந்திய அணிக்கு மார்ச் 6-ஆம் தேதி முதல் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.