வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (11:02 IST)

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி அறிவிப்பு

மகளிருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் மார்ச் 4, 2022 அன்று டவுரங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் தொடங்கும். 

 
ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2022 போட்டிகளில், இந்தியாவின் முதல் ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடும். இந்த போட்டி மார்ச் 6 ஆம் தேதி நியூசிலாந்தின் டவுரங்காவில் நடைபெறும். இதற்காக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மகளீர் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
நியூசிலாந்து மற்றும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை, 2022க்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: 
மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கவுர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங் தாக்கூர், தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராஜேஸ்வரி கயக்வாட், பூனம் யாதவ்.
 
காத்திருப்பு வீரர்கள்: சப்பினேனி மேகனா, ஏக்தா பிஷ்ட், சிம்ரன் தில் பகதூர்.